சிப்காட் தொழில்நுட்பபூங்கா,சிறுசேரி - சென்னை.
பழைய மகாபலிபுரம் சாலையில் திருபோருர் செல்லும் வழியில் சிறுசேரி தொழில்நுட்ப பூங்கா கண்ணில் பட்டது,இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை சென்று பார்த்த ஞாபகம்,சரி என்று உள் நுழைந்தேன்.இரண்டாண்டுகளுக்கு முன் நன்றாக இருந்த சாலைகள் எல்லாம் குண்டும் குழியுமாக ஆகிவிட்டிருந்தது,Xansa building ஐ தாண்டியதும் TCSன் இடத்தில் கட்டுமாண வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
அதே சாலையில் கடைசி திருப்பத்தில் மேலும் ஒரு TCS site ல் கட்டுமான வேலைகள் ஞாயிற்று கிழமையில் கூட மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.இந்த பகுதியில் வர இருக்கும் மென்பொருள் உற்பத்தி நிலையங்களில் TCS site தான் மிக பெரிதாக தெரிகிறது.TCS site க்கிற்கு எதிரில் Mathematical Institue என்ற பெயரில் கட்டி முடிக்கபட்டு ஒரு அலுவலகம் உள்ளது.
இன்னும் சற்று தூரத்தில் Cognizant Technology யின் இரண்டாவது விரிவாக்கம் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.மேலும் திரும்பிய இடமெல்லாம் அந்த பொட்டல் காட்டில் கான்கிரிட் கட்டிடங்கள் மிக வேகமாக எழும்பி கொண்டிருக்கின்றன.இன்னும் இரண்டாண்டுகளில்,மொத்த இடமும் கான்கீரிட் கட்டிடங்களும்,அதன் உள்ளே பணிபுரியும் இளைய தலைகளுமாக நிரம்பிவிடும் என்பதில் சந்தேகமில்லை.




5 பின்னூட்டங்கள்:
நல்ல பதிவு!!
நன்றி
Nothing about Patni Computers?
I didn't see any building or site with Patni board.I may have missed also.
சிறுசேரி மட்டுமல்ல சென்னை சுற்றியுள்ள பல இடங்கள் இப்படி மாறாத்தான் போகிறது! நல்ல ஆராய்ச்சி... பல தகவல்கள் என்னிடமும் உள்ளது, விரைவில் தருகிறேன் ;) ரொம்ப சீரியஸ்சா படமெடுத்து போட்டு கலக்கிட்டீங்க...
நன்றி we the people.சும்மாஅந்த பக்கம்,ground rate எப்படி இருக்குன்னு விசாரிக்கலாம்னு போனங்க...
அவ்வளவு தான்,ஆராய்ச்சியெல்லாம் ஒன்னுமில்லைங்க....
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home