Friday, May 19, 2006

கல்லிலே கலை வண்ணம் கண்டார்...

மகாபலிபுரம் செல்லும் வழியில் கிழக்கு கடற்கரை சாலையில் திருவிடந்தையில் அமைந்துள்ளது நித்திய கல்யாண பெருமாள் கோவில்.9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோவில்,சோழர்கள் காலத்தை சேர்ந்தது என நினைக்கிறேன்.108 பாடல் பெற்ற வைணவ திருதலங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குவதாக அங்குள்ள தல வரலாறு கல்வெட்டு தெரிவிக்கின்றது.இக்கோவிலின் மூலவராக ஆதிவராக பெருமாள் வீற்றுள்ளார்,தொடையில் பூமாதேவியை தாங்கி பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.

கோவிலின் சுற்று சுவர்கள் முழுவதும் கல்வெட்டுகள் பதிக்கபட்டுள்ளன,இவையனைத்தும் 10 ஆம் நுற்றாண்டிலிருந்து 16 ஆம் நுற்றாண்டை சேர்ந்தவைகள் என தல வரலாற்று கல்வெட்டு தெரிவிக்கின்றது.1000 வருடத்தை தாண்டிவிட்ட இந்த கோவிலின் முன்புற மண்டபம்,கண்ணை கவரும கலை சிற்பங்களை தாங்கி நிற்கிறது.முன்மண்டபத்தின் ஒவ்வொரு துணில் உள்ள சிற்பங்களும் ஒவ்வொரு கதை சொல்கின்றன.





கோவில் நுழைவாயிலின் முன்புறம் அமைந்துள்ள கலை மண்டபம்.



நாண் தொடுக்கும் இந்த வில்வீரர் யார் மீது அமர்ந்திருக்கிறார்?.



எலியை கண்டாலே ஒடும் நம்க்கு மத்தியில்,புலியை தலைமீது தாவவிட்டு,கொல்லும் இந்த வீரர் யார் ?


கழுகா,ராஜாளியா அல்லது கிளியா எதன் மீது இந்த வீரமங்கை அமர்ந்துள்ளார்,யாரை நோக்கி நாணேற்றுகிறார்.பண்டைய காலத்து பெண்கள் வீரத்தின் விலை நிலம் என்பதற்கொரு சான்று.


மீசையை முறுக்கி தமிழ்நாட்டின் வீரத்தை வெளிகாட்டும் வகையில் கையில் குறுவாளும்,தொடையில் மற்றொரு கட்டாரியுமாக காட்சி தரும் இவர் யார்?

நீண்ட சடையுடன் நடன மாடும் நடன மங்கை.அவர் கையில் இருப்பது குறுவாட்களா அல்லது நடனமாடுவதற்காக உள்ள கோல்களா என்று தெரியவில்லை.


ஆடல் காணீரோ,விளையாடல் காணீரோ என்று கேட்கும் நடன மங்கை


பாம்பு பஞ்சனையிலே ஒய்யாரமாய் படுத்திருக்கும் ஆதிகேசவரும் அவருது துணைவியர் இருவர் காலடியிலே அமர்ந்திருப்பதை சித்தரிக்கும் காட்சி.


நீண்ட தாடியும்,நெற்றியில் திருநீற்று பட்டையும் போட்ட இவர் யார் துறவியா அல்லது வேடதாரியா,என்று தெரியவில்லை.


ஒய்யாராமாய் நின்றபடி எதோ ஒரு விலங்கை துரத்துவதற்காக கையை ஓங்கும் இவரது மற்றொரு கையிடையில் ஒளிந்து கொண்டிருக்கும் குட்டி குழந்தை.அரச குடும்பத்து அம்மணியை போல் தோற்றமளிக்கும் இவர் துரத்த முயலும் விலங்கு எது என்று புரியவில்லை.



ரதத்திலிருந்து நாண் பூட்டி வில்லெறிவதற்காக குறி பார்க்கும் வீரர்.மிக அழகாக செதுக்கபட்டுள்ள சிற்பம்.

இன்னும் பல சிற்பங்களின் படங்களை நான் பதிவில் போடவில்லை.கண்ணை கவரும் நமது வரலாற்று நினைவு சின்னங்கள் காலத்தால் அழியாமல் பாதுகாக்க படவேண்டும்.

5 பின்னூட்டங்கள்:

At Fri May 19, 12:52:00 PM, Blogger Sivabalan said...

நல்ல பதிவு!!

படங்கள் அருமை!!

 
At Fri May 19, 12:59:00 PM, Blogger Sami said...

உங்கள் வருகைக்கு நன்றி சிவபாலன்.

 
At Fri May 19, 05:00:00 PM, Blogger [சதானந்தன் said...

தமிழ் மணத்துக்குள் ஒரு சிற்ப கலாரசனை ரசிக் வைக்கிறீர்கள்.
நல்ல பதிவு தொடர்ந்து போடுங்கள் எதிர்பார்க்கிறோம்.

 
At Wed Jun 14, 01:40:00 PM, Blogger குமரன் (Kumaran) said...

சாமி. நல்ல சிற்பங்கள். நல்ல படங்கள்.

இரண்டாம் படத்தில் இருப்பவர்கள் இராமனும் அனுமனும் என்று நினைக்கிறேன். நான்காவது படத்தில் இருப்பவர் கிளி மீது அமர்ந்து காமன் கணைகளைக் காதலர்கள் மேல் தொடுக்கும் ரதிதேவி. கடைசிப் படத்தில் இருப்பவர் கண்ணன். பெருமழை வந்த போது கோவர்த்தன கிரியைத் தன் கைகளில் குடை போல் தாங்கி நின்று கோகுலத்தில் இருக்கும் உயிர்களைக் காக்கும் திருக்கோலம். இடது கையிடையில் இருப்பது கண்ணனின் நண்பர்களில் ஒருவர் என்று நினைக்கிறேன்.

 
At Thu Jun 15, 10:20:00 AM, Blogger Sami said...

குமரன்,

நீங்கள் கடைசி படம் என்று குறிப்பிடுவது கடைசிபடத்திற்கு முந்தையதாக இருக்கவேண்டும்,அவ்வாறாக இருப்பின் உங்களது விளக்கம் எனக்கு உடன்பாடாக படவில்லை.

ஆனால் உங்களுடைய விளக்கத்தை முழுவதுமாக மறுப்பதற்குமில்லை.மேலும் அதைப்பற்றிய மேல் விவரங்கள் கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன்

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home