தொடர்ந்து தரம் தாழும் வைகோ
//வைகோ அறிக்கைசட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் தந்த தீர்ப்பை மதித்து ஏற்றுக் கொள்கிறோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
அறிக்கை:
"அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி கூறுகிறோம். 2004 மக்களவைத் தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைய தமிழக வாக்காளர்கள் பெரும் வெற்றியைத் தந்தார்கள். அவர்கள் இப்போது சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தந்துள்ள ஆதரவை மதிப்பிட்டால், திமுக கூட்டணியின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டிருப்பதை உணரலாம். அதிமுக அரசு மீது அதிருப்தியோ, எதிர்ப்போ இல்லை என்றே கூறலாம்.
சென்னை ராஜதானியில் இருந்து தமிழ்நாடு தனி மாநிலமாக உருவெடுத்ததற்குப் பின்னர் நடந்த பொதுத் தேர்தல்களில் இதுவரை பிரதான எதிர்க்கட்சி பெற்றிருந்த இடங்களைவிட அதிக இடங்களில் சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக பெற்றுள்ளது. இதுவே தமிழக அரசியலில் எங்கள் அணிக்கு சாதகமான திருப்புமுனையை விரைவில் உருவாக்கும்.
இத்தேர்தலில் பல கட்சிகளின் கூட்டணி பலத்தை சேர்த்துக் கொண்டு போட்டியிட்ட திமுக, வாக்காளர்களை ஏமாற்றிக் கவருவதற்காக செயல்படுத்தவே முடியாத வாக்குறுதிகளை வாரி இறைத்தது. தேர்தல் வெற்றிக்காக இவர்கள் தந்த பொய்யான மாய்மால வாக்குறுதிகள் எல்லாம் ஏமாற்று வேலை என்பது வெகுவிரைவில் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும்.
இத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் தந்த தீர்ப்பை மதித்து ஏற்றுக் கொள்கிறோம். சட்டப்பேரவையில் ஒரு எதிர்க்கட்சிக்கு உரிய ஜனநாயகக் கடமையை முறையாகச் செய்வோம்."//
ஜெ வின் அறிக்கையையும் வைகோ வின் அறிக்கையையும் கூர்ந்து கவனியுங்கள்,ஜெ வின் அறிக்கையில் ஒரு அரசியல் தலைவரின் முதிர்ச்சி தெரிகிறது.ஒரு வித்தியாசம் தெரிகிறது.அரசியல் நெறிகளுக்கும்,கொள்கைக்கும் பெயர்போனவராக கருதபடும் வைகோவின் அறிக்கையில் ஒரு முதிர்ச்சி தெரியவில்லை.ஜெயா டிவி இன்று காலை தேர்தல் முடிகள் அறிவித்த போது செய்த கோமாளி தனம் தான் தெரிகிறது.35 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் இவர்,இவரது தோல்வியை இவரது கூட்டணி மாறிய சந்தர்பவாதத்துக்கு கிடைத்த அடியாக கருதாமல் அல்லது ஏற்றுக் கொள்ளாமல்,திமுக அணியின் தொலைகாட்சி பொய் பிரசாரத்தை நம்பி மக்கள் வாக்களித்தாக கூறுகிறார்(ஜெயா டிவியில் புரட்சி புயலின் பேட்டியை பார்க்கவும்)
மக்களை மடையர்களாக மதித்து கூட்டணியை மாற்றினார்,2 ரு அரிசி தர முடியாது (சரியா தவறா என்று நான் கூறவில்லை) என்றார் ஆனால் அம்மா இலவசமாக 10 கி அரிசி கொடுப்போம் என்று கூறிய போது பல்டி அடித்தார்.ஜெ வின் ஒவ்வொரு அறிவிப்பின் போதும்,சர்கஸ் கூடாரத்தில் பல்டி அடிக்கும் கோமாளி போல் பல்டி அடித்தார்.
அனைத்தும் முடிந்து ஜெ வெ ஒரு அமைதியான அறிக்கையை வெளியிடும் போது கூட இவர் இன்னும் ஜெயா டிவி அறிவிப்பாளர்களை போல அறிக்கை விடுகிறார்.கட்சி ஆரமித்து மூன்று தேர்தல்களுக்கு மேல் ஆகிவிட்டது,இன்னும் சொந்தமாக வெற்றி பெறாத இவர்,திரு விஜயகாந்த் அவர்களை பார்த்து பாடம் கற்று கொள்ள வேண்டும்.
கட்சி ஆரமித்து சில மாதங்களே ஆன நிலையில் தைரியமாக எதிரியின் கோட்டை என்று கருதபடும் இடத்தில் நின்று வெற்றி பெற்று காட்டியிருக்கிறார்.ஆனால் வைகோ இன்று ஜெ டிவியில் பெரும் புன்னகையேடு எங்களுக்கு இந்த வாய்பை அளித்த அம்மாவுக்கு என்றென்றும் நன்றியோடு இருப்போம் என்று கூறியதை பார்க்கும் போது இவரையெல்லாம் தமிழகத்தின் எதிர்காலம் என்று நினைத்த என்னை போன்றோர் வெட்கி தலை குனிய வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.
வைகோவின் அரசியல் முதிர்ச்சியின்மை,கட்டுகோப்பு கட்டுகோப்பு என்று முழங்கும் அவர்,அவருடைய கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்களை கூட்டணி அமைக்கும் போது கட்டு படுத்த முடியாமை,கூட்டணி முடிவில் குழப்பதனம்,ஒரே வாரத்தில் இந்த கூட்டணியின் தலைவரை முதல்வராக்குவேன் என்று பேசிவிட்டு அடுத்த வாரம்,அடுத்த பக்கம் சாய்ந்தது போன்ற பல தெளிவற்ற செயல்களால் அவரை ஒரு முடிவெடுக்க முடியாத தலைவராகவே இந்த தேர்தல் அடையாளம் காட்டியிருக்கிறது.
தென் மாவட்டங்களில் மிகுந்த செல்வாக்கு பெற்ற கட்சியாக மதிமுக வை தினமலர் போன்ற பத்திரிக்கைகள் சித்தரித்தன ஆனால் மதிமுகவின் ஒட்டு சதவிதம் இவரது கோமாளி தனத்தால் அதலபாதளத்திற்கு தள்ள பட்டிருக்கிறது.
இவ்வளவிற்கும் பிறகு இவரது அறிக்கையில் தமிழகத்தில் ஒரு வலுவான எதிர்கட்சி உருவாகியிருக்கிறது என்று கூறும் இவர்,இவரது பங்கு அதற்கென்ன என்று யொசித்தாரா?.தமிழகத்தில் அதிமுக ஒரு வலுவான எதிர்கட்சியாக உருவாகியிருப்பதற்கு காரணம் அதிமுக ஆட்சியின் மீது எந்த ஒரு பெரும் புகார் இல்லாததே காரணம்,மதிமுக அதிமுகவுடன் கூட்டணி வைத்ததல்ல.
தொடர்ந்து இதே போல் நடந்து கொண்டாரானால்,வைகோவும் மதிமுக வும் இருந்த இடம் தெரியாமல் போகும் என்பது நிச்சயம்.
பின்குறிப்பு : பின்னுட்டம் இடுபவர்களின் கவனித்திற்கு,எனது பதிவில் இடப்படும் பின்னுட்டங்கள்,தமிழ் மணம் அன்மையில் மறுமொழியிடப்பட்டோர் பகுதியில் வருவதில்லை.அதை நிவர்த்தி செய்ய முடியாத காரணத்தால்,உங்கள் பின்னுட்டத்தை எனது வலைபதிவில் காணுமாறு வேண்டிகோள்கிறேன்.

40 பின்னூட்டங்கள்:
Please visit http://thamizmanam.com/tmwiki/index.php?id=help
//உதவி மற்றும் தகவல் பக்கங்கள் //
I hope you can get some solution.
Otherwise send a comment in Mr.Kasi's blog, you may get info.
Sami,
I 100% agree with you. In 1993, as a person from Kovilpatti, I was so proud of him and thinking that he is going determine the future and also going to make a revolution at Delhi.
But alas, Shame to me now! He became the No1 Comedian, made all of us fools.
MDMK is a Joke, Its future is going to be fun, and as Kalignar Said Vaiko is Poiko!!!!
So let us not take them serious at all!
Sivabalan,
i just verified my template,every thing had been done as per their suggetion,i don't understand why it is not picking up my blog comments.Any way will touch base with Kasi.thanks for your suggestion.
bouginsoup(அட்டகாசமா இருக்கிறது பெயர்),
உங்கள் வருகைக்கு நன்றி.மிகவும் ஆச்சரியத்தை அளிப்பதாக உள்ளது அவர் நடந்து கொள்ளும் விதம்,
இவருக்கும் இவருடைய ரெண்டு கெட்டான் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்துக்கும் பெரிய வித்தியாசத்தை கண்டு பிடிப்பது கடினமாகிவிடும் என்றே நினைக்கிறேன்.
சமி,
தமிழ்மண மன்றத்தில் பல வலைப்பதிவர்கள் இதே கேள்வியைக் கேட்டிருந்தனர். அதற்கு காசி அவர்கள் அளித்த பதிலை இங்கே வெட்டி ஒட்டுகிறேன்[cut&paste]. காசி அவர்கள் சொல்லும் வழிமுறைகளைப்[instructions] பின்பற்றிப் பாருங்கள்.
சிலவேளைகளில் உங்கள் சிக்கல் தீர்ந்துவிடும்.
------------------------------
காசி சொல்கிறார்:
முதலில் உங்கள்
வலைப்பதிவில் 'பதிவு'
கருவிப்பட்டை
நிறுவவேண்டுமே!
http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=toolbar
------------------------------
even I had a good respect on this guy.all on vain.
VAIKO SAYS- "இதுவே தமிழக அரசியலில் எங்கள் அணிக்கு சாதகமான திருப்புமுனையை விரைவில் உருவாக்கும்."
அர்த்தம்என்னவோ?
காங்க்ரசையும் பமகவையும் திமுக கெட்டியாய் பிடித்து கொள்ள வேண்டும் போலும்.
கூட்டணி அரசை அதிமுக அமைத்துவிட போகிறது.
so funny.
தமிழர்கள் சோற்றாலடித்த பிண்டங்கள் என்று தேர்தல் முடிவு குறித்து விமரிசத்தவர்களெல்லாம் இன்று தலைகீழாக குதித்துக் கொண்டிருக்கையில், வைகோ சொன்னதில் தவறேதுமில்லை.
அனானி,உங்கள் வருகைக்கு நன்றி
சரியா சொன்னிங்க...
வெற்றி,
உங்கள் வருகைக்கு நன்றி,நான் கருவிபட்டையை எனது template ல் நிறுவியிருக்கிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
மாயவரத்தான்,
உங்களை போல் உள்ளவர்கள் தொடர்ந்து அவரை ஆதரிப்பது,வியப்பிலாழ்த்துகிறது.
உங்கள் வருகைக்கு நன்றி.
Sami,
One of the best article from you. I liked it.
14 years left since he started his party. He could not able to make it one alone.
He has to learn from Vijaykanth.
Sami,
One of the best article from you. I liked it.
14 years left since he started his party. He could not able to make it one alone.
He has to learn from Vijaykanth.
நன்றி அனானி அவர்களே.
நன்றி அனானி அவர்களே.
Its not easy to run a party without money.
If VAIKO stand alone also no one going to vote.
He knows the two party will do the same thing but no other way to go.
மாயவரத்தான் ரமேஷ்குமார் என்ற அதிமுக விசுவாசி போகும் இடமெல்லாம் எழுதும் எச்சங்களளப் படித்து சிரித்து மகிழுங்கள்.
மாயவரத்தான் ரமேஷ்குமார் என்ற அதிமுக விசுவாசி போகும் இஅட்மெல்லாம் எழுதும் எச்சங்களளப் படித்து சிரித்து மகிழுங்கள்.
அனானி,
உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை,கட்சி ஆரமிக்கும் போது கூட்டணியை நம்பியா கட்சி ஆரமித்தார்?.தனியாக நின்றால் ஓட்டு விழாதென்றால்,விஜயகாந்துக்கு எப்படி ஓட்டு விழுந்தது.
தனியாக நின்று ஓட்டு விழாதென்றால் யாருடைய தவறு அது?.
உங்கள் வருகைக்கு நன்றி.
உங்கள் வருகைக்கு நன்றி திரு வெங்காயம் அவர்களே.
ஜெ:
அடிச்ச கைப்புள்ளைக்கே(வைகோ) இவ்வளவு இரத்தம்னா....
அடி வாங்னவன் உயிரோட இருப்பாங்கிரா...!!??
நாஞ்சில் சம்பத்:
இப்படி.. உசுப்பேத்தியே....உசுப்பேத்தியே....வைகோவை... சைகோ அக்கிவிட்டுட்டுடானுங்க.....
வைகோ:
நம்மள இன்னும் இந்த ஊரு நம்புதாடா??
It is not very wise to compare Voiko and Vijiyakath. Both are totaly different people. One has politic background and another has strong cinema background. Both of them not equal.
There is no wonder why Vaiko behaves like this. During the interview in Jaya TV even Mr. Rabi Bernard addressed Ms. Jayalalitha as Selvi Jayalalitha. But whereas, Vaiko addressed Ms. Jayalalitha as Manbumigu Puratchi Thalavi Amma Avargal through out the interview. Why I say this is, Mr. Rabi Bernard is the employee of Jaya TV who should have been more obedient than Vaiko who is 'supposed' to be an independent leader. You may also recall that Vaiko dispensed with calling Ms. Jayalalitha as Arumai Sagodhari (Dear Sister) may be due to the rebuke from 'His Higher Ups' and addressed her as Manbumigu Puratchi Thalavi Amma Avargal in all his meetings later. I would like somebody comes forward to Screen a movie '24th Pulicasi' with Vaiko on the lead role!
வலைப்பதிவர்கள்தான் வை.கோவின் சொற்களையும் செய்கையையும் ஞாபகம் வைத்துக்கொண்டு புலம்பித் திரிவார்கள். ஆனால் மக்கள் இதையெல்லாம் மறந்துவிட்டு அடுத்த முறை புதிதாகவே சிந்திக்கத் தொடங்குவார்கள்.
தங்களை சோற்றாலடித்த பிண்டங்கள் என்று சொன்னவரையே சில மாதங்களில் முதல்வராக்கிய மக்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அப்படிச் சொன்னவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அப்படி மக்களைத் திட்டாத அளவில் கருணாநிதியைவிட வை.கோ நூறுமடங்கு மேல் என்பதை மறுக்க முடியுமா?
//35 தொகுதிகளில் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் இவர்,இவரது தோல்வியை இவரது கூட்டணி மாறிய சந்தர்பவாதத்துக்கு கிடைத்த அடியாக கருதாமல் அல்லது ஏற்றுக் கொள்ளாமல்//
என்னங்க சொல்றீங்க? இதுவரை வைகோ கட்சி ஆரம்பித்து, ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லையே? அதை வைத்துப் பார்க்கும் போது இந்த முறை இவர் ஒரு தொகுதியில் ஜெயிச்சிருந்தாலும் அது வெற்றி தானே?!!
மற்றபடி, ஒரு கூட்டணியில் ஒருவர் தான் கோமாளியாக இருக்கவேண்டும் என்னும் கணக்கிற்காக இப்படிப் பேசி(பேசச் சொல்லி) இருப்பாங்களோ என்னவோ.. !!!!
///ஜெ:
அடிச்ச கைப்புள்ளைக்கே(வைகோ) இவ்வளவு இரத்தம்னா....
அடி வாங்னவன் உயிரோட இருப்பாங்கிரா...!!??
நாஞ்சில் சம்பத்:
இப்படி.. உசுப்பேத்தியே....உசுப்பேத்தியே....வைகோவை... சைகோ அக்கிவிட்டுட்டுடானுங்க.....
வைகோ:
நம்மள இன்னும் இந்த ஊரு நம்புதாடா??/////
சூப்பர்...
ஜெயா======ஆணவம்
வைகோ=====கோமாளி
வாடகை ஸ்பீக்கருக்கு அப்படி கத்த சொல்லிதான் மம்மி உத்தரவு போட்டிருக்காக..
வாங்கின காசு செரிக்க வேணாமாப்பு...
I agree with you...
Vaiko is a diminishing factor in TN politics.. He is truning to be an another subramanyamswamy...
after an year or so people will forget this fellow and we can see this guy either is DMK or AIADMK or with whoever gives a MLA or panchyat leader post to him
--Raja
நல்ல பதிவு!!
குறைந்தபட்சம் விஜயகாந்த் தனியாக நின்று ஒரு சீட்டு பெற்றிருக்கும்போது அ.தி.மு.க.கூட்டணியில்35 சீட் பெற்று 6ல் 1பங்கு கூட வெற்றி பெறமுடியாத வைகோ கொஞ்சம் வாயையும்.....அடக்கி வைப்பது நலம்.
குறைந்தபட்சம் விஜயகாந்த் தனியாக நின்று ஒரு சீட்டு பெற்றிருக்கும்போது அ.தி.மு.க.கூட்டணியில்35 சீட் பெற்று 6ல் 1பங்கு கூட வெற்றி பெறமுடியாத வைகோ கொஞ்சம் வாயையும்.....அடக்கி வைப்பது நலம்.
//பாராளுமன்ற தேர்தலில் இருந்த நிலைக்கு அதிமுக பெருமளவு முன்னேறியதுமக்கள் நலப் பணிகளுக்கு கிடைத்த மரியாதை//
வைகோ என்ன சொல்கிறார் என்றால் திமுக கூட்டணிக்கு பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு பின்னடைவாம், அதாவது வைகோ விலகியதால் பின்னடைவாம். இது எப்படி இருக்கு
உதய்,உங்களுடைய வருகைக்கு நன்றி,வாய்விட்டு சிரித்தேன்.
மிதக்கும் வெளி,கோவிகண்ணன்,
உங்கள் வருகைக்கு நன்றி.
ராஜா,
//after an year or so people will forget this fellow and we can see this guy either is DMK or AIADMK or with whoever gives a MLA or panchyat leader post to him//
இது கொஞ்சம் அதிகமா தெரிகிறது.உங்கள் வருகைக்கு நன்றி
சிவபாலன்,
உங்கள் வருகைக்கு நன்றி,உங்களது தளராத ஊக்கத்தால்,எனது பின்னுடமிடபட்ட பதிவுகள்,அண்மையில் மறுமொழியபட்டோர் பகுதியில் வர ஆரமித்துள்ளன.நன்றி.
தரண்,
//வாங்கின காசு செரிக்க வேணாமாப்பு...//
எதுங்க அந்த 40 கோடியா?...
உங்கள் வருகைக்கு நன்றி
பொன்ஸ்,
//
இதுவரை வைகோ கட்சி ஆரம்பித்து, ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லையே? அதை வைத்துப் பார்க்கும் போது இந்த முறை இவர் ஒரு தொகுதியில் ஜெயிச்சிருந்தாலும் அது வெற்றி தானே?!! //
6 தொகுதிகளின் வெற்றியை நான் வைகோ வின் வெற்றியாக கருதவில்லை,அது அதிமுக வின் வாக்குகளால் நடந்த ஒன்றாகவே கருதுகிறேன்.
ஆனால் நீங்கள் சொல்வதை ஒத்து கொள்ளதான் வேண்டும்,6 ல் வென்றாலும் ஒன்றில் வென்றாலும் வெற்றி வெற்றி தான்.அதான்,புயல் ரொம்ப ஜெடிவியில் உணர்ச்சி வசப்பட்டான்னு நினைக்கிறேன்.
//
மற்றபடி, ஒரு கூட்டணியில் ஒருவர் தான் கோமாளியாக இருக்கவேண்டும் என்னும் கணக்கிற்காக இப்படிப் பேசி(பேசச் சொல்லி) இருப்பாங்களோ என்னவோ.. !!!!//
இருக்கும்ங்க....அப்படியே அந்த சைடுல யாருன்னு(கோமாளி) போட்டு உடைச்சிருங்களேன்..
அனானி,
//வலைப்பதிவர்கள்தான் வை.கோவின் சொற்களையும் செய்கையையும் ஞாபகம் வைத்துக்கொண்டு புலம்பித் திரிவார்கள். ஆனால் மக்கள் இதையெல்லாம் மறந்துவிட்டு அடுத்த முறை புதிதாகவே சிந்திக்கத் தொடங்குவார்கள்.//
நன்றிங்க,எங்களுக்கு அம்னீசியா இல்லன்னு ஒத்துகிட்டதுக்கு...
உங்கள் வருகைக்கு நன்றி
ப்ரதிமா,
//
I would like somebody comes forward to Screen a movie '24th Pulicasi' with Vaiko on the lead role!
//
ஏங்க,இப்படி சுத்தி வளைச்சு சொல்றிங்க,கலைப்புலி தாணுவுக்கு நேரடியாகவே நீங்க இந்த யோசனையை கூறியிருக்கலாம்.
கைப்புள்ள ரசிகர்களே,பாருங்க இங்க ஒரு ஆள் கைப்புள்ளக்கி போட்டிய உருவாக்குறாங்க...
உங்கள் வருகைக்கு நன்றி
Everybody tells Vaiko as "Komali". I am not understanding why. If everybody feels this is due to changing of alliance from DMK to ADMK, What about DMK ( changing from pandaram BJP to Indra's DIL's Congress) and PMK (changing from ADMK to DMK). You all should also call MK,Ramadoss as komali.
Everybody says that Vaiko could not contest and win single seat like Vijayakhant. Vaiko did not spent like Vijaykhant in the previous elections.He also thought that it is very difficult to win without the help of DMK or ADMK. Vijajkhant spent so much and I heard he sold all his properties. People may appriciate him, but whatever money he lost is lost. He cannot get back unless he joins with DMK or ADMK.It will be very difficult for him to run the party for 5 years without money.The statement which will be made by people in future if he joing with dmk or admk will be totally different. People may call him also komali.
Why MK did not contest this election without any alliance. Because he knows that without alliance he cannot win. When 70 years experienced politician could not contest on his own, how you can expect from vaiko.
When karunanidhi family eats everthing of DMK's money, why vaiko cannot eat just 40 crores.
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home