வாஷிங்டன் பயணம் - பகுதி II

வாஷிங்டனில் உள்ள முக்கியமான பார்வையிடங்கள் மற்றும் அவைகளின் முகவரி அடங்கிய பட்டியல்.நாங்கள் சென்ற வெகு சில இடங்களில் எங்களை கவர்ந்தவை பச்சை நிறத்தில் குறிப்பிடபட்டுள்ளன.அதிகம் சொல்லிகொள்ளும் படியான இடங்கள் ஆரன்ஞ் நிறத்தில் குறியிடபட்டுள்ளன.
கிட்டதிட்ட நாங்கள் செல்ல வேண்டிய அனைத்து இடங்களும் மெட்ரொ ரயில் பாதையின் வளையத்துக்குள் வந்ததால்,எங்களின் ஒரு கவலை தீர்ந்து விட்டிருந்தது.முதல் கட்டமாக எங்கள் திட்டமிடுதலில் நாங்கள் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றிய ஒரு பட்டியலை தயாரித்து கொண்டு அவற்றை எங்கள் ஆர்வம் மற்றும் பிரபலதன்மை(popularity) ஆகியவற்றின் அடிபடையில் வரிசை படுத்தி கொண்டோம்.வரிசைக்கு பிறகு அவற்றிற்கு அருகில் உள்ள மெட்ரொ ரயில் நிலையத்தை பொறுத்து மீண்டும் அவற்றை ஒரு வரிசையிலிட்டு கொண்டோம்.இவ்வாறு பிரித்ததால், எங்களுக்கு அருகருகில் உள்ள இடங்களுக்கு நாங்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையங்களின் பட்டியல் தயாரிப்பது சுலபமாயிற்று.
வாஷிங்டனில் பார்பதற்கு ஏகபட்ட இடங்கள் உள்ளன,ஆனால் குறைவான நாட்களில் இவைகள் அனைத்தையும் பார்க்க வேண்டுமென்றால் தெளிவான முன்னொக்கு திட்டம் அவசியம்.அதைவிட மிக அவசியம் பார்க்க வேண்டிய இடங்களுக்கு முன்கூட்டியே முன்பதிவு செய்வது அல்லது நுழைவு சீட்டு வாங்குவது.spy museum போன்ற சில அருங்காட்சியகங்களின் நுழைவு சீட்டுகள் TicketMaster இணைய தளத்தில் வாங்க முடிகிறது.இதனால் நமக்கு நேரம் மிச்சமாவதுடன்,சீட்டு கிடைக்காமல் போகும் வாய்ப்பு தவிர்க்கபடுகிறது.
மேலும் வெள்ளை மாளிகையின் விருந்தினர் பகுதியை(கவனிக்கவும்,விருந்தினர் அறைக்கும் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கபடுகின்றனர்) பார்க்க விரும்புவர்கள் அவர்கள் தொகுதி காங்கிரஸ் மென்(Congressmen) மூலமாக முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும்,அப்பொழுது தான் அவர்கள் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு அதிகாரிகளால் உள் செல்வதற்கு அனுமதிக்கபடுவார்கள்.அதுமட்டுமல்ல வெள்ளை மாளிகையின் உள் செல்பவர்கள் புகைபட கருவி மற்றும் stroller உட்பட எதுவும் எடுத்து செல்வதற்கு அனுமதியில்லை மேலும் அவற்றை அங்கு வைத்து செல்வதற்கு இடமும் கிடையாது,அனுமதியும் கிடையாது.ஆகையால் நீங்கள் ஒரு குழுவாக சென்றால் சிலர் வெளியில் அமர்ந்து மற்றவர்களின் பொருட்களை பார்த்து கொள்ளலாம்,தனியாக சென்றால் பிரச்சினை தான்.அது சரி இவ்வளவு கெடுபிடிக்கு நடுவே உள் சென்று பார்ப்பது உபயோகமானதா என்று கேட்டால் இல்லையென்றே நான் சொல்வேன்.
இதே பை மற்றும் கேமரா பிரச்சினையால் நான் உள்ளே சென்று பார்க்கவில்லை,ஆனால் உள்ளே சென்று வந்த என் மனைவி அங்கு ஒரு அறையில் சில படங்கள் வைக்கபட்டிருந்ததை தவிர வேறொன்றுமில்லையென்று கூறியது என் மனதுக்கு கொஞ்ஞம் திருப்தி அளித்தது.
வெள்ளை மாளிகையை பார்க்க விரும்பும் பலர் வெள்ளை மாளிகை எதிரில் இருக்கும் பூங்காவிலிருந்து படம் எடுத்து கொள்வதையே விரும்புகின்றனர்,இதற்கு அனுமதி எதுவும் தேவையில்லையென்பதால்,இது சுலபமாகி விடுகிறது.

3 பின்னூட்டங்கள்:
Wow Good Work!
Is this the JPG file, you are talking about in your previous post?
Thanks Mr.Sami
Mr.Sami,
Why, you are blog is not listed on the right side of updated running list of blogs.
Because, in other blogs, if we post message, then it will come to first on the running list.
But, your blog is not so.
Because, if it so, then lot people can read your blog.
This is just suggestion. Please do not take it otherwise.
சிவபாலன்,
இதில் தவறாக எடுத்து கொள்ள ஒன்றுமில்லை,ஏன் எனது பதிவுக்கு பின்னுட்டம் வந்த பிறகு தமிழ்மணத்தில் அண்மையில் மறு மொழியறியபட்ட பகுதியில் வருவதில்லை என்று தெரியவில்லை.யாரிடம் இதற்கு உதவி கேட்பது என்றும் தெரியவில்லை,அதனால் இது தொடர்கிறது.விரைவில் இதை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.
மேலும் Mr எல்லாம் வேண்டாம்,வெறும் சாமி என்றே எழுதுங்கள் அது போதும்.நன்றி.
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home