Friday, April 07, 2006

வேதனை தரும் விமான நிலையங்கள்.......


ஓன்றரை ஆண்டுகளாக அமெரிக்காவின் பல விமான நிலையங்களின் வசதியை அனுபவித்து பழகிய எனக்கு மும்பாய் விமான நிலையம்,நமது நாட்டின உள் கட்டமைப்பு வசதியின் அவலத்தை கண்கூடாக காணும் ஒரு வாய்ப்பை வழங்கியது.11.30 மணிக்கு வந்திறங்க வேண்டிய ஏர் இந்திய விமானம்,ஓடுதள நெருக்கடி காரணமாக 45 நிமிடம் தாமதமாக இறங்கியது.

மூன்று hand luggage மற்றும் ஒரு laptop bag இவைகளுடன் இறங்கிய நாங்கள் சென்னைக்கு செல்லும் விமானத்தை பிடிப்பதற்கு பெரும் போராட்டமே நடத்த வேண்டியிருந்தது.மும்பை விமான நிலையத்தில் சென்னைக்கு செல்லும் விமானத்திற்கான வாசல் 19 க்கு செல்வதற்கு வந்த எங்களுக்கு esclator மட்டுமே தென்பட்டது.நிரைய பயண பைகள் மற்றும் குழந்தை வேறு இருந்ததால் elevatorல் செல்லலாம் என்று தேடிய எங்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது.வேறு வழியின்றி குழந்தையையும்,கை பெட்டிகளையும் தூக்கி கொண்டு esclator ல் ஒரு வழியாக சமாளித்து இறங்கினோம்.வாசல் 19ல் சென்னை மற்றும் திருவனந்தபுரத்திற்கு செல்லும் பயணிகள் காத்திருந்தனர்.

இரு விமானத்திற்கான பயணிகளையும் ஏற்றி செல்ல பேருந்து காத்திருந்தது.Air Bridge என்று சொல்லபடுகிற விமான இணைப்பு தள பற்றாகுறை காரணமாக உள்ளுர் விமானங்களில் பெரும்பான்மையான விமானங்கள் அவற்றின் நிறுத்துமிடத்திலேயே பயணிகளை ஏற்றும் அவலம்.இந்த பயணிகளை வாசலில இருந்து விமானம் இருக்கும் இடம் வரை ஏற்றி செல்லும் பேருந்துகளில் மக்கள் அடித்து பிடித்து கொண்டு ஏறிய கொடுமை காண சகிக்கவில்லை,இதை முறை படுத்தி பயணிகள் சீராக செல்வதற்கு உதவி செய்ய வேண்டிய விமான நிலைய ஊழியர்கள் ஒருமுறை திருவனந்தபுரத்திற்கு செல்லும் பயணிகளையும் மறுமுறை சென்னை செல்லும் பயணிகளையும் மாற்றி மாற்றி அழைத்து குழப்பத்தை உண்டு படுத்தினர்.

தெளிவாகவும்,நட்புணர்வுடனும் செய்ய வேண்டிய பணியை குழப்பத்துடனும் எரிச்சலுடனும் செய்தனர். விமானத்திற்கு அருகில் எங்களை இறக்கிவிட்ட பேருந்து சென்றவுடன் மீண்டும் ஒரு தள்ளு முள்ளுடன் பயணிகள்,விமானத்திற்குள் ஏறினர்.Airbus ரக வகையை சேர்ந்த அந்த விமானத்திற்குள் எறுவதற்கு,ஒரு மாடி உயர படிகட்டு வண்டியை
வைத்திருந்தனர்.அந்த படிகட்டுகளில்,கை பெட்டிகளையும்,குழந்தையையும் சுமந்து கொண்டு எங்களை போல் சிலர் மிகுந்த அவதியுடன் விமானத்திற்குள் ஏற வேண்டியதாயிற்று.உள்ளே சென்ற பிறகாவது உள்ளிருக்கும் விமான சிப்பந்திகள் எங்கள் பெட்டிகளை வாங்கவோ அல்லது உதவவோ முன்வராதது,ஏர் இந்தியா மற்றும் இந்திய அரசு சார்ந்த விமான போக்குவரத்து துறையின் லட்சணத்தை உறுதி செய்தது.

இந்த அவலத்தை ஒரளவிற்கு போக்க நினைக்கும் மன்மோகன் சிங் அரசுக்கு இடது சாரிகள் போடும் முட்டுகட்டை ஜனநாயகத்தின் அராஜகத்தையே காட்டுகிறது.இடது சாரிகளின் முட்டாள் தனமான ஒட்டு வங்கி அரசியலால் அதிகம் அவதிபடுவது பயணம் செய்யும் நடுத்தரவர்க்க மக்கள்களே.இன்னமும் இவர்கள் விமானத்தில் பயணம் செய்பவர்கள் எல்லாம் முதலாளிகள் என்று முழக்கமிட்டு ஊழியர் சங்கங்களுடன் சேர்ந்து கொண்டு நாட்டை முன்னேற விடாமல் செய்யும் அவலம் வேதனைக்குரியது.

முறையே பதினைந்தாயிரமும்,பத்தாயிரமும் ஊழியர்களை கொண்டுள்ள ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தங்கள் தேவைக்கும் மேல் மூன்று பங்கு அதிகமாக ஊழியர்களை கொண்டுள்ளதாக,06/04/06 ஹிந்து நாளிதழில் வந்த செய்தி கட்டுரை தெரிவிக்கிறது.இவற்றில் ஆள் குறைப்பு செய்வதற்கு,அரசுக்கு ஆதரவு அளிக்கும் பிராகஷ் காரத்
மற்றும் சீத்தாரம் யெச்சுரி போன்ற அதி மேதாவிகளின் எதிர்ப்புக்கு பணிந்தே மத்திய அரசு தயங்குகிறது.சில நேரங்களில் இந்த கொள்கைவாதிகளை அடக்குவதற்கு ஜெவை போன்ற முரட்டு அரசியல்வாதிகள் தேவையென்றே தோன்றுகிறது.

நாடு தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டுமென்றால்,அரசு சேவையில் மெத்தனங்கள் குறைக்கப்படவேண்டியது மிக அவசியம்.இன்றைய கால கட்டத்தில் ஒரு நாட்டின் வாசல் அதாவது Gateway of the country என்பது அந்த நாட்டின் முக்கிய விமான நிலையங்களே,அவைகளே குறைகளின் கூடாரமாக விளங்கினால்,நாடு முன்னேறுவதெப்படி?

6 பின்னூட்டங்கள்:

At Fri Apr 07, 03:25:00 AM, Blogger துளசி கோபால் said...

ஏங்க இப்பத்தான் முதல்முறையா அங்கிருந்து இந்தியா வந்தீங்களா?

போகப்போகச் சரியாயிடுங்க. நீங்க பழகிடுவீங்க.:-)))) கவலைப்படாதீங்க.

25 வருசமா எனக்குப் பழகிருச்சுங்க. கவலையை விடுங்க.

 
At Fri Apr 07, 05:17:00 AM, Blogger Sami said...

துளசி,

பழகறத்துக்கு சொல்ல வரலீங்க,ஒரு அத்யாவசிமான சேவையில் அலட்சியமும்,அதை சரி செய்ய விடாமல் போடப்படும் முட்டுகட்டைகளும் தான் வெறுப்பையும் வேதனையும் தருவதாய் உள்ளது.உங்கள் பின்னூட்டதிற்கு நன்றி.

 
At Fri Apr 14, 03:41:00 AM, Blogger காழியன் said...

துளசி...தங்களுக்கு ஏற்பபட்ட அதே அனுபவங்கள் எனக்கும் ஏற்பட்டுள்ளது. மேலும்..
1. விமான நிலையத்தினுள் வீசும் ஒரு வித துர்நாற்றம்.
2. இரயில் நிலையங்களைப் போல் தள்ளு வண்டியில் டீ காபி விற்பது
3. கழிப்பறைகளில் டிப்ஸ் எதிர் பார்ப்பது.
4. ஊழியர்கள் இந்தியிலையே பேசுவது

போன்ற அனுபவங்களும் எனக்கு கிடைத்துள்ளன.

 
At Mon Apr 17, 12:47:00 PM, Blogger Sami said...

மாறும் வளர்சிகேற்ப மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ள விமான நிலையங்களின் சேவைகளின் தரம் பின்னோக்கி செல்வது வேதனைக்குரிய விஷயம்.நன்றி காழியன்

 
At Mon Apr 17, 04:33:00 PM, Blogger சந்தோஷ் aka Santhosh said...

சாமி,
நீங்கள் கூறுவது போல் சில குறைபாடுகள் இருக்கின்றன. ஆனா என்ன செய்வது நம்மிடம் செலவு செய்ய பணம் இல்லையே. ஊழியர்களின் மெத்தனம் கண்டிப்பாக இருக்கிறது அது தனியார்மயமாக்கப்பட்டால் சரியாகி விடும். அதே நேரத்தில் இங்க ஊழியர் பற்றாக்குறையும் உள்ளது. இதுல ஆள் குறைப்பு வேற. இப்பொழுது தானே நம் நாட்டில் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. எல்லாவற்றிக்கும் சில சமயம் எடுக்கும். இங்க அமெரிக்காவுல Immegrationக்கு மணிக்கணக்கில் வரிசையில் நிற்போம், லைசென்ஸ் வாங்க, SSN வாங்க நிற்க தயங்காத நாம் அங்க போன உடனே வரிசையை பாத்து சலிக்க ஆரம்பித்து விடுவோம்(பொரும்பாலும் நாம் வரிசையில் நிற்க மாட்டோம் எங்கடா ஏதாவது ஒரு ஏஜெண்டு கிடைப்பான் என்று தேடுவோம்.) சென்னை விமான நிலையத்தை பாத்திங்க இல்ல எப்படி இருக்குது. எனக்கு தெரிந்த வரையில் அட்லாண்டா விமான நிலையத்தை விட அது சுத்தமாக இருந்தது.

காழியன்,
எனக்கு தெரிந்த வரையில் மும்பை, சென்னை விமான நிலையத்தில் எங்குமே துர்நாற்றம் இல்லை. தள்ளு வண்டியில் காபி விற்கிறார்களா? கழிப்பறைகளில் டிப்ஸா? நீங்க அந்தப்பக்கம் போயி ரொம்ப நாள் ஆச்சி அப்படின்னு நினைக்கிறேன்.
ஊழியர்கள் இந்தியில் பேசுறாங்களா? அதுக்கு என்ன பண்ணுவது அவங்களுக்கு ஏது தெரியுமே அதுல தானே பேச முடியும். அப்படி பாத்தா ஜெர்மனி விமான நிலையத்தில் ஜெர்மனில் தான் பேசுறாங்க அது நமக்கு தப்பா தெரியலை. ஏதாவது குற்றம் சொல்லணும் அப்படின்னே அலைந்தால் என்ன பண்ணுவது. செம காமெடி சார் உங்களோட.

துளசி அக்கா செல்றதுக்கு ஒண்ணும் இல்லை யூடூ....

 
At Wed Apr 19, 12:47:00 PM, Blogger Sami said...

சந்தோஷ்,

அட்லாண்டா விமான நிலையத்தையும் சென்னை விமான நிலையத்தையும் ஒப்பிடுவது ஒத்துகொள்ள முடியாத விஷயம்.நம்ம ஊரு பாஸ்போர்ட் அலுவலகத்தில் வரிசையில் நிற்பதற்கும் SSN க்காக வரிசையில் நிற்பதற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

நீங்கள் சொல்வது போல் ஊழியர் பற்றாகுறை எங்கும் இருப்பதாக தெரியவில்லை.புள்ளிவிவரங்கள் மூன்று மடங்கு ஊழியர்கள் ஏர் இந்தியாவில் அதிகமாக இருப்பதாக கூறுகின்றன.
உங்கள் பின்னுட்டத்திற்கு நன்றி.

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home