அலட்சியத்தின் உச்சகட்டம்....
நன்றி : தினமலர்சென்னைக்கு தண்ணீர் கிடைப்பதே அரிதாகி விட்ட கால கட்டத்தில்,அரிதாய் நிரம்பி இருக்கும் சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இப்படி வீணாக்கப்படுவது வேதனைக்குள்ளானது.சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகளை அமைத்து வரட்சியை போக்கினார்கள் பல்லவ மன்னவர்கள் என்று வரலாறு தெரிவிக்கின்றது.
ஆனால் இன்றைக்கு அவற்றில் பாதிக்கு மேற்பட்ட ஏரிகள் காணாமல் போய்விட்டன.மீதி ஏரிகள் முழுவதுமாக நிரம்புவது ஏதோ காண கிடைக்காத அபூர்வ காட்சியாக ஆகிவிட்டன.இந்த நிலையில் இயற்கையாக பார்த்து கொடுத்த மழை நீரில் முழுவதும் சேமிக்க முடியாமல் வீணாக்கி விட்ட நிலையில் மீதி இருக்கும் நீரையும் முறையாக காக்காமல் இப்படி வீணடிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
இதற்கெல்லாம் மூல காரணம்,நமது அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும், கடமை பொறுப்பு (Accountability) என்ற ஒன்றின் அவசியம் இல்லாமல் போனதே.எந்த ஒரு தவறுக்கும் அரசாங்கத்தில் யாரும் பொறுப்பு ஏற்பதில்லை.எழுபத்தைந்து சதவீதம் குற்றச்சாட்டிற்கு அரசியல் உள் நோக்கம் இருப்பதாக கூறி தட்டி கழித்து விடுகிறார்கள்,மீதி இருபத்தைந்து சதத்திற்கு யாராவது இளிச்சவாயனை பலிகடாவாக்கி விடுகிறார்கள்.இது மாறாத வரையில் கீழ் நிலை அதிகாரிகளுக்கு பொறுப்பு வர போவதும் இல்லை,பொறுப்புள்ள அதிகாரிகளை அரசியல்வாதிகள் செயல் பட விடபோவதும் இல்லை.
சாதிகளை பாதுகாக்க தினம் ஒரு சங்கங்கள் தோன்றும் வேளையில் பொது நலனை பாதுகாக்க வருடத்திற்கு ஒரு சங்கம் கூட தோன்றுவதில்லை.

0 பின்னூட்டங்கள்:
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home