அட்லாண்டாவிலிருந்து சென்னைக்கு........
ஒன்றறை ஆண்டுகள் கண் முடி கண் திறக்கும் நேரத்தில் ஓடி விட்டன.இன்று தான் ஹார்ட்ஸ்பீல்டு ஜெக்சன்(அட்லாண்டா விமான நிலையம்) விமான நிலையத்தில் இறங்கியது போலிருக்கிறது.ஆனால் அதற்குள் அதே விமான நிலையத்தில் எடுத்து வந்த பெட்டிகளை விட அதிக பெட்டிகளை சுமந்து கொண்டு செல்ல தயாராகி விட்டோம்.இந்த இடை வெளியில் எத்தனை நிகழ்வுகள் எத்தனை மாற்றங்கள்.ஆரம்ப இரண்டு மாதங்கள்,கொஞ்ஞம் அவஸ்தையான காலகட்டமாகயிருந்தது. Social Security Number(SSN) அதாவது சமூக பொது அடையாள எண்,வரும் வரையில்,கிட்டதட்ட விட்டு காவல் கைதிகள் போலதான் நானும் என் குடும்பமும் வாழ வேண்டியிருந்தது.
கடைக்கு செல்வதிலிருந்து அலுவலகம் செல்வது வரை எல்லாவற்றிற்கும் சக அலுவலக தோழர்களையே நம்பி இருக்கவேண்டிய ஒரு சூழ்நிலை.அரசு அல்லது பொது வாகன வசதி அதிகமாக இல்லாத அட்லாண்டா போன்ற நகரங்களில் கார் இல்லையென்றால் விட்டுக்கைதியாக வேண்டிய சூழ்நிலை தவிர்கக இயலாதது.இந்தியாவிலுருந்து வரும் போது கொண்டு வந்திருந்த International Drivers Permit வைத்து வாடகை கார் எடுத்து ஓட்டலாமென்று முயன்ற போழுது எந்த வாடகை கார் நிறுவனமும் IDP யை வைத்து கார் தர தயாராக இல்லை.கிட்டதிட்ட இரண்டு மாதங்கள் கழித்து SSN வந்ததும் முதல் வேலையாக வாகன போக்குவரத்து அலுவலத்தில் தேர்வு எழுதி பயிற்சி உரிமம் பெற்று கொண்டு,நான் வாங்கி வைத்திருந்த மாஸ்டா காரை ஒட்ட தொடங்கினேன்,பயிற்சி உரிமம் வாங்கிய இரண்டாவது வாரமே வாகன ஒட்டி தேர்வை முடித்து,முழு உரிமம் பெற்ற பொழுது ஒரு சிறையிலிருந்து விடுதலை அடைந்த உண்ர்வு உள்ளுக்குள் ஒட்டியிருந்தது.
இந்த ஒன்றறை ஆண்டுங்களில் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை மகாணங்களில் அரைவாசி இடங்களை பார்த்தாயிற்று.ஆனாலும் உள்ளுக்குள்ளே சின்ன வருத்தம்,புளொரிடாவுக்கு மிக அருகில் இருந்தும்,புளொரிடாவின் எல்லையை கூட தொடாமல் செல்வது தான்.இன்னும் ஐந்து தினங்கள் அமெரிக்காவில்,அடுத்த வார கடைசியில் மீண்டும் ஏர் இந்தியாவில் பயணம்......
சொர்கமே என்றாலும் அது நம்மூர போல ஆகுமா...........................மீண்டும் காதில் ஒலிக்கும் அதே பாடல் வரிகள்.............

0 பின்னூட்டங்கள்:
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home