அம்மாவை நம்பி அம்போ ஆன அதி மேதாவிகள்
புதிதாக இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்கள்,திண்டிவனத்தாரும்,விஜய ராஜேந்திரரும்.காங்கிரஸை இரண்டாக பிளந்தேன் என கொக்கரித்து திரிந்த திண்டிவனமும்,நான் திமுகவில் இருந்தால் ஸ்டாலினின் வளர்ச்சி பாதிக்கும் என பயப்படுகிறார்கள் என்று உதார் விட்ட ராஜேந்திரரும்,அம்மாவின் மெகா கூட்டணியில் கும்பலோடு கோவிந்தாவாக சில சீட்டுகளை அள்ளி கொண்டு போகலாம் என்ற பகல் கனவில் மண் விழுந்தது.இன்றைய முதல்வரின் கடந்த கால அணுகுமுறைகளை சிறிதளவேணும் ஞாபகம் வைத்திருந்தால் இவர்களுக்கு இந்த கதி வந்திருக்காது.இதே கதி தான் வைகோவிற்கும் ஏற்படும் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.

0 பின்னூட்டங்கள்:
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home