பனிமலையில் பயங்கரம்
சமீபத்தில் பிரிட்டனின்,Independent Online பத்திரிக்கையின் அறிவியல் பகுதி ஆசிரியர் (science Editior) ஸ்டீவ் கான்னர் எழுதிய "Climate change "irreversible" as Artic ice fails to reform" என்ற கட்டுரையை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அவரது கட்டுரையின் சாரம்சம் இது தான்,
" கடந்த இரண்டு ஆண்டுகளில், இரண்டாவது ஆண்டாக குளிர்காலத்தில் ஆர்டிக் பகுதியில் உள்ள கடல் பகுதியில் கரைந்து போன பனிமலைகள் மீண்டும் எதிர்பார்த்த அளவுக்கு உருவாகவில்லை என்பது தான்.ஓவ்வொரு ஆண்டும் வெயில் காலத்தில் உருகும்(சிறிதளவு மட்டுமே) பனிமலைகள் மீண்டும் குளிர்காலத்தில் உரைந்து பழைய நிலமைக்கு மாறி விடுவது வழக்கம்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக இது நடைபெறவில்லை.இது விஞ்ஞானிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பதோடு,ஆர்டிக் பனிமலைகள்,வெயில் காலம் மற்றும் குளிர்காலம் இரண்டிலும் தொடர்ந்து உருகுகிறது என்று நம்ப வெய்த்துள்ளது.இதனால் ஆர்டிக் பனிமலைகள் எதிர்பார்த்த ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருகி அழியும் வாய்ப்பை இது அதிகபடுத்தி உள்ளதாக கருதுகின்றனர். "
மேலும் படிக்க இங்கே செல்லவும்
இதற்கு முக்கிய காரணமாக உலக தட்ப வெப்ப நிலை மாறுதல்கள் (Global Warming) கூறப்படுகிறது. உலக நாடுகளால் தொடர்ந்து வெளியேற்றபடும் நச்சு வாயுக்களால் பூமியின் மேற்பரப்பில் உள்ள ஒசோன் வாயு படலத்தில் ஏற்படும் அழிவானது,பூமியின் வெப்ப நிலையை அதிகரிக்க செய்து பனிமலைகளை உருக செய்கின்றது.இவ்வாறு பனிமலைகள் உருகுவதால் நாளடைவில் கடல் மட்டம் அதிகரித்து,கடல் பகுதியில் உள்ள நகரங்கள் அழியும் அபாயம் உள்ளதாக பல செய்திகள் தெரிவிக்கின்றன.
இது ஒரு புறம் இருக்க கடந்த இரண்டு ஆண்டுகளில் உலெகெங்கும் அதிகரித்து வரும் Extreme Climatic Condition அதாவது தட்ப வெப்ப நிலையின் உச்சகட்ட மாறுதல்கள் இதற்கு அச்சாரம் போடுவது போல அமைந்துள்ளன.
கடந்த 2005ல் மட்டும்,
- மூன்று முறை அமெரிக்காவை தாக்கிய கடும் சூறாவளிகள்,
இந்தோனிஷிய பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள்,
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுனாமி தாக்குதல்கள்,
மும்பையிலும்,சென்னையிலும் பெய்த வரலாறு காணாத கன மழைகள்,
பாகிஸ்தான் கஷ்மீரிலும் இந்திய கஷ்மீரிலும் ஏற்பட்ட நிலநடுக்கங்கள்,
தென் அமெரிக்க மற்றும் மேற்கு இந்திய தீவுகளை தாக்கிய பெரும் அட்லாண்டிக் சூறாவளிகள்,
இவையெல்லாம் நமக்கு ஏதோ ஒன்றை உணர்த்தினாலும்,உலக நாடுகளின் கவனம் இன்னும் முழுமையாக இந்த இயற்கை சீற்றங்களின் மேல் திரும்பவில்லை என்பது தான்.மேற்கத்திய நாடுகளிலாவது அவ்வப்போழுது இது போன்ற செய்திகள் முக்கிய நாளிதழ்களில் இடம் பெற்று மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை உருவாக்கி அதன் மூலம் அரசுகளின் கவனத்தை ஈர்க்கின்றன.
ஆனால் நம்மூரிலோ இதை செய்ய வேண்டிய பத்திரிக்கைகள் அரசியல் மற்றும் சினிமா துறையினர்க்கு களப்பணி ஆற்றுவதே கடனாக இருக்கின்றன.
வெகு ஜன பத்திரிக்கைகள் குறைந்த பட்சம் ஒரு பத்து சதவீதமவது இது போன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் நாட்டிற்கும் நல்லது, நாம் வாழும் இந்த பூமிக்கும் நல்லது.
பின்குறிப்பு : வலைபதிவின் தலைப்பு கொஞ்ஞம் சினிமா தனமாக இருந்தால் மன்னிக்கவும்.

0 பின்னூட்டங்கள்:
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home