Saturday, March 18, 2006

மதிப்புகூட்டபட்ட வாக்குரிமை

ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல் வருகிறது,கேட்டு புளித்து போன அதே கோஷங்கள் எழுப்படுகின்றன.போதாதகுறைக்கு புது கட்ச்சிகள் தினம் ஒன்றாய் தோன்றுகின்றன.ஒட்டு போடும் மக்களில் 70% சதத்திற்கும் மேலானவர்கள்,ஒன்று கிராமத்தில் இருக்கிறார்கள் அல்லது படிக்காதவர்களாய் இருக்கிறார்கள்.இவர்களுக்கு சரியான விஷயத்தை எடுத்து சொல்ல வேண்டிய வெகு ஜன பத்திரிக்கைகள்,
இன்று கட்சியின் கொள்கை பரப்பு
செயலார்காளை போல நடந்து கொள்கின்றன. இந்த மாதிரி சூழலில் படித்தவர்களிவடையே ஒட்டும் போடும் பழக்கத்தை உக்குவிக்கும் வகையில் மதிப்பு
கூட்டபட்ட வாக்கை(like VAT value added Tax) அமல் படுத்தினால் என்னவாகும் என்ற ஒரு சிந்தனை .......
சரி,மதிப்பு கூட்ட பட்ட வாக்குரிமை என்று நான் சொல்வது இது தான்,வாக்காளரிகளின் கல்வி
தரம்,வயது மற்றும் தொழில் இவற்றை வைத்து ஒவ்வொரு வாக்களர்களின் வாக்கு மதிப்பு நிர்ணயிக்கபட்டு அந்த விகிதத்தில் அவர்களது வாக்கு மொத்த வாக்கில் சேர்க்கபட வேண்டும்,இவ்வாறு
செய்தால் அரசியல் கட்சிகளுக்கு மக்களிடையெ ஒரு பயம் வரும் என்று நான் கருதுகிறென்.மேலும் தொடர்ந்து மூன்று முறை வாக்களிகதவர்களின் வாக்குரிமை தற்காலிகமாக பரிக்க பட வேண்டும்.அதே சமயம் அரசியல் கட்சிகளுக்கு வாக்களிக்க விரும்பாதவற்களுக்கு அதை பிரதி பலிக்க வாக்கு சீட்டில் வாய்ப்பு தரபட வேண்டும்
ஆனால் இவையெல்லாம் நடைமுறையில் சாத்தியபடுமா என்பது தெரியவில்லை.

1 பின்னூட்டங்கள்:

At Sun Mar 19, 02:00:00 AM, Blogger barathee|பாரதி said...

//////வாக்காளரிகளின் கல்வி
தரம்,வயது மற்றும் தொழில் இவற்றை வைத்து ஒவ்வொரு வாக்களர்களின் வாக்கு மதிப்பு நிர்ணயிக்கபட்டு அந்த விகிதத்தில் அவர்களது வாக்கு மொத்த வாக்கில் சேர்க்கபட வேண்டும்
////////////////

அதுசரி.. படித்த, நகர்புறத்தில் வாழ்கிற, வயதான அல்லது வயதாகாத நல்ல தொழில் உள்ளோர் எத்தணை பேர் ஓட்டுப்போடுகிறார்கள்? என்னதான் செஞ்சாலும் இவங்க ஓட்டுப்போடமாட்டாங்க போல.

ஒன்று, ஓட்டுப்போடுவதற்காக வருமானவரி சலுகை தரவேண்டும். அல்லது ஓட்டுப்போடவில்லை என்றால், இனி ஓட்டுப்போடும்போது மை வைக்க நடுவிரல் இருக்காது என்று தண்டனை கொடுக்கவேண்டும். அப்போதுதான் அவங்க ஓட்டுப்போடுவாங்களா இருக்கும்.

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home