Friday, March 17, 2006

நயகரா - கனவு தேசத்திற்கு ஒரு பயணம்

நயகரா அருவி
சென்ற ஆண்டு (அதாவது 2005) மே மாதம் ஒரு நீண்ட வார விடுமுறையில்(long weekend), எங்களது நீண்ட நாள் கனவு பகுதியான,நயகாரா செல்லலாம் என்று முடிவு செய்தோம்.அட்லாண்டாவிலுருந்து ,buffalo செல்ல விமானம் மற்றும்,தங்கும் விடுதி முன்பதிவு செய்ய தேடியபொழுது,மலிவு விலை டீல் ஓன்றும் அகபடவில்லை,அப்பொழுது நண்பர் ஒருவர் கொடுத்த ஆலோசனையின் பேரில்,அட்லாண்டாவிலிருந்து,buffalo செல்வதற்கு பதிலாக பிட்ஸ்பர்க் சென்று அங்கிருந்து நயகாராவிற்கு காரில் செல்வது என்று தீர்மானித்து,முன்பதிவு செய்து கிளம்பினோம்.
அமெரிக்கன் அருவி
பிட்ஸ்பர்க் விமான நிலையத்தை அடைந்த பொழுது மணி சுமாரக இரவு 9 இருக்கும். ஏவிஸ் வாடகை கார் காரரின்,தாராள மனசால் Mercury Grand கார் கிடைத்தது.ஆனால் அந்த சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை,விமான நிலையத்தை விட்டு,யாஹு மேப்பின் உதவியோடு வெளியில் காரை ஓட்டி வந்த எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது,மேப்பின் படி நாங்கள் செல்ல வேண்டிய வழி தடத்தில்,கட்டுமான வேலை நடைபெற்று கொண்டிருந்ததால்,வேறுபாதையில்(Detour) செல்ல குறியிடபட்டிருந்தது.

சாரல்களுக்கு நடுவே Maid of the Mist
நம்ம ஊரை போல் சாலையோரத்தில் வண்டியை நிறுத்தி,டீ கடையில் வழி கேட்கும் வசதி அங்கில்லாததால்,ஹோட்டலுக்கு செல்லும் எங்கள் பயணம் மிகுந்த விறுவிறுப்பு நிரைந்தாக மாறிவிட்டிருந்தது.ஒருவழியாக விமானநிலையத்தை நான்ங்ஐந்து முறை சுற்றி பக்கத்திலிருந்த ஹோட்டலுக்கு வந்தடைந்த போது மணி 11ஐ நெருங்கியிருந்தது. அரைகுரை துக்கத்துடன் ஹோட்டல் அறையை அடைந்து,மறு நாள் காலை 6 மணிக்கு நயகாரவிற்கு புறப்படலாம் என்று திட்டமிட்டபடி தூங்க சென்றோம்.

பார்க் நுழைவாயிலில் இருந்து தெரியும் சாரல் மேகம்
மறுநாள் காலை 6 மணிக்கு புறபட வேண்டிய நாங்கள் 7 மணிக்கு தான் அறையை விட்டு வெளியில் வந்தோம்,ஏற்கனவே தாமதமான எங்களை மழை வேறு துரத்தியது.பிட்ஸ்பர்கிலருந்து பேன்சில்வெனியா மகாணத்தை தாண்டி நியுயார்க் மாகண எல்லைக்குள் வந்த பிறகும் மழை விட்டபாடில்லை.எங்களுக்கு கொஞ்ஞமாக நம்பிக்கை குறைய ஆரமித்தது,மழை அதிகமாக இருந்தால் நயகரா அருவியில் உள்ள Maid of the Mist என்ற படகு சவாரியை நிறுத்தி விடுவார்கள் என்பதே எங்களது கவலையாக இருந்தது.நயகார அருவிக்கு 40 மைல் தொலைவில் சொல்லும் போது கூட மழை நன்றாக பெய்து கொண்டிருந்தது.
கண்காணிப்பு கோபுரம்
ஆனால் எங்கள் நல்ல நேரம் Buffalo விற்குள் நுழைந்து டொல் கேட்டை தாண்டியவுடன் மழை நின்று வெயில் அடிக்க ஆரமித்தது. மனசுக்குள் மகிழ்ச்சி மின்னல்டிக்க நயகரா பூங்காவிற்குள் எங்கள் கார் நுழைந்தது.அருவியிலிருந்து ஒரு மூன்று,நான்கு மைல் தொலைவில் உள்ள பூங்கா நூழைவு பகுதியிலிருந்தே அருவியின் சாரல்கள் உருவாக்கியிருந்த மேக கூட்டத்தை காணமுடிந்தது. பூங்காவிற்குள் கார் நிறுத்துவதற்கு இடம் கிடைக்காததால்,தனியார் கார் நிறுத்தும் இடத்தில் காரை ஒதுக்கிவிட்டு,அவசரமாக பார்கிற்கு விரைந்தோம்.பார்க்கில் 5 டாலர் கொடுத்து அனுமதி சீட்டு வாங்கிய பின்,படகு தளத்திற்கு(docking yard) விரைந்தோம்.

படகின் மேற்தளத்தில் இருந்து கண்டுகளிக்கும் பயணிகள்.

படகு தளத்தின் நுழைவு வாயிலில் கொடுத்த நீர் தடுப்பானை(rain coat) உடுத்திக்கொண்டு,படகிற்காக காத்திருந்தோம்.காத்திருந்த நேரத்தில் சுற்றும் முற்றும் பார்த்ததில், அந்த இடம் ஒரு குட்டி இந்தியாவகவே தெரிந்தது,எங்கெங்கு நோக்கினும் நமது மக்கள் கூட்டம் தான் கண்ணில் தென்பட்டது.படகு எங்களை சுமந்து சென்று அமெரிக்கன் அருவியின் முகப்பில் நிறுத்தியது.அருவியின் மேலிருந்து விழும் தண்ணீர் கிழே உள்ள பாரைகளில் பட்டு சிதறி தெரித்து எங்கள் மீது மழையாக கொட்டியது.அதற்காகவே கொடுக்கபட்ட ரெயின் கோட் எங்களை அருவி சாரலில் இருந்து நனையாமல் காப்பாற்றியது.


சிறிது நேரத்திற்கு பிறகு படகு மீண்டும் எங்களை சுமந்து சென்று ஹார்ஸ் ஷு(Horse Shoe Falls) அருவியின் முகத்துவாரத்திற்கு அருகில் நிறுத்தியது.பெரும் புயல் மழையில் நிற்பது போன்ற அந்த அனுபவம்,நெஞ்சை விட்டு என்றென்றும் நீங்காது.அவ்வளவு சாரல்களுக்கு மத்தியிலும் எனது புகைபட கருவியும்,விடியோ பட கருவியும் தொடர்ந்து இயங்கி கொண்டிருந்த்து.முடிந்தவரையில் அருவியின் அழகை விடியோ பட கருவியில் அள்ளி தள்ளினேன்.


ஹார்ஸ் ஷு அருவியின் முகப்பில் சற்று நேரம் நின்ற படகு,எங்களை சுமந்து கொண்டு நதியின் கனடா கரையோரமாக சென்று மிண்டும் எங்களது படகு துறையில் இறக்கி விட்டது.சிறிது நேர ஓய்வுக்கு பின், கோண்டினில் இருந்த பீட்சாவை வயிற்றில் நிரப்பி கொண்டு,பார்க்கை சுற்றிபார்க்கும் பேருந்தில் ஒரு வலம் வந்தோம்.பார்க்கை விட்டு வெளியில் வந்த எங்களுக்கு,கனடா வரை சென்று பார்க்க ஆசை தோன்றியது.


இரவு தங்குவதற்கு முன்பதிவு செய்யாததால்,நேராக பிட்ஸ்பர்க்கு காரை திருப்பினோம். எங்களிடம் கனடா விசா இல்லை என்று தெரிந்தும், கரை கிள்ப்பி கொண்டு டொல் பூத்த்தை நோக்கி விரைந்தோம்.டோல்பூத்தில் பாஸ்போர்ட்டை காட்டி உள்ளே வந்த எங்களை,நேராக குடிபெயர்ப்பு அலுவலகத்திற்குள்(Immigration office) அனுப்பினார்கள்,அங்கு நாங்கள் விசாரிக்கபட்டு,விசா இல்லை என்று தெரிந்ததும்,அனுமதி மறுக்கபட்டு திருப்பி அனுப்பட்டோம்.

1 பின்னூட்டங்கள்:

At Fri Apr 28, 02:27:00 PM, Blogger Sivabalan said...

Nice Blog.

I did visit this place. Good one.

Did you fly in Helicopter?. It was nice experience. (70$ for 40 mins fly)

 

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home