இப்படி கை நீட்டி பேச முடியுமா இங்கே ?

பயோகான் தொழில் அதிபர் கிரண் மஜும்தார்,கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் பெங்களுரின் உள்கட்டமைப்பு (infrastructure ) வசதியை மேம்படுத்துவதற்கான ஆலோசனை வழங்குவதை தான் படத்தில் காண்கிறீர்கள்.
நம்ம ஊரில் இவ்வாறு சரிசமமா உட்கார்ந்து பேசறது இருக்கட்டும், சரியில்லன்னு மொதல்ல தைரியமா சொல்லமுடியுமா?
பத்திரிக்கைகள் எழுதினாலே காவல் துறையை விட்டு துரத்தி பிடிப்பார்கள்.....
தனிபட்ட ஆட்கள் எம்மாத்திரம்...............
ஆட்சி பிடத்தில் இருப்பவர்கள்,எளிதில் அனுககூடியவர்களாக இருப்பது நாட்டிற்கு நலம் பயக்கும்.

3 பின்னூட்டங்கள்:
கர்நாடகத்தில் இல்லாத லஞ்சமில்லை...ஊழல் இல்லை. ஆனால் அரசியல் தலைவர்கள் (தேவேகவுடாவைத் தவிர்த்து) முடிந்த அளவிற்கு அணுகக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள். மரியாதையும் தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள். தமிழ்நாட்டில்தான் அப்துல் கலாமையே பெயர் சொல்லி அழைக்கின்றவர்கள் கருணாநியை கலைஞர் என்றும் ஜெயலலிதாவை புரட்சித்தலைவி என்றும் கொண்டாடுகிறார்கள். கர்நாடகத்தின் அரசியல் அநாகரீகங்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால் அரசியல் பேச்சுகளில் அநாகரீகங்கள் இல்லை. மானங்கெட்டவனே....பெண்ணினத்தின் பேய்...என்றெல்லாம் இங்கு யாரும் பேசுவதில்லை. தமிழ்நாடு இந்த விஷயத்தில் போகவேண்டிய தூரம் மிக அதிகம்.
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்
அல்லவா?
ராகவன்,பெருவிஜயன் இருவருக்கும் நன்றி.
லஞ்ஞ லாவன்யமாக இருக்கட்டும்,அரசியல் சந்தர்ப்பவாதமாக இருக்கட்டும்,ஆனால் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் அனுக கூடியவர்களாகவே இருக்கிறார்கள் என்பது உண்மை.அதையே சுட்டி காட்டிய உங்கள் இருவருக்கும் நன்றி.
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home