Wednesday, March 15, 2006

நயகராவை பற்றி சில சுவையான தகல்வகள்




கழுகு பார்வையில் Horse shoe falls








கழுகு பார்வையில் அமெரிக்கன் அருவி தோற்றம்.


நயகரா சில குறிப்புக்கள்


1. 1682ல் ஐரோப்பாவில் அருட்தந்தை லுயிஸ்
ஹென்னிப்னால் வெளியிடப்பட்ட "Description de
la Louisiane" நூலுக்கு பிறகு,நயகராவை பற்றி
ஐரோப்பாவில் அதிகம் தெரியவந்ததாக,சில
வலைதளங்கள் குறிப்பிடுகின்றன.


2. நயகரா உலகத்திலேயே இரண்டாவது பெரிய
அருவி,தென் ஆப்பிரிக்காவில் உள்ள விக்டோரியா
அருவி தான் உலகத்திலேயே மிகப்பெரிய அருவி.


3. நயகராவில் மொத்தம் மூன்று அருவிகள்
உள்ளது.அமெரிக்கன் அருவி(American
Falls),ப்ரைடல் வியில் அருவி(Bridal Veil Falls)
மற்றும் கனடா/குதிரை குளம்பு
அருவி(Canadian/Horse Shoe Falls)


4. அமெரிக்க அருவியின் மொத்த உயரம் 176
அடி.ஆனால் அருவியின் அடியில் உள்ள
பாரைகளினால் உயரம் 70 அடியாக
உள்ளது.150,000 யுஸ் கெலன்கள் தண்ணிர் ஒரு
வினாடிக்கு விழுகிறது.தண்ணிர் விழும்
அளவு,அருவியின் மேற்புரத்தில் உள்ள இரண்டு நீர்
மின்சார நிலையங்கள் உறிஞ்சும் தண்ணிரின்
அளவை பொறுத்து மாறுபடுகிறது.


5. Horse Shoe/Canadian Falls (குதிரை குளம்பு)
அருவி வளைவின் நீளம் 2600 அடி. உயரம் 167
அடி.தண்ணிர் விழும் கொள்ளலவு 600,000 யுஸ்
கெலன்கள்.மூன்றில் ஒரு பங்கு அருவி அமெரிக்க
எல்லைக்குள் உள்ளது.


6. இந்த அருவிகளில் இருந்து விழும் தண்ணிர் 15
மைல் துரத்தை கடந்து,ஒண்டாரியோ ஏரியில்
சென்று கலக்கிறது.


7. வருடம் 12 மில்லியன் சுற்றுலா பயணிகள்
நயகராவை பார்பதற்கு வருவதாக புள்ளி
விவரங்கள் தெரிவிக்கின்றன.


8. குளிர் காலத்தில் நயகராவின் ஒடும் தண்ணீர்
உறைந்து போகாது என்ற
பொழுதிலும்,அருவியிவிலிருந்து வரும் சாரல்கள்
உறைந்து அருவியின் மேல்புறத்தை முடி ஒரு பனி
பாரையாக மாறும் என்று வலைத்தளங்கள்
தெரிவிக்கின்றன.மேலும் 1912 ஆம் ஆண்டு வரை
இவ்வாறு உருவாகும் பனியினாலான பாலத்தின் மீது
மக்கள் நடக்க அனுமதிக்க பட்டு வந்துள்ளார்கள்
என்று செய்திகள் தெரிவிக்கின்றன.


9. நயகராவின் வயது 12000 ஆண்டுகள்.


10. உலகத்தில் ஐந்தில் ஒரு பங்கு நன்னிரை
கொண்டுள்ள பெரிய எரிகளான மிச்சிகன்
ஹுரன்(Lake Michigan Huron),சுப்பிரீயர்(Lake
Superior) மற்றும் ஈரி(Lake Erie), ஆகியவற்றில்
இருந்து வரும் தண்ணிர்,நயகரா ஆற்றில் கலந்து
இந்த அருவியை உருவாக்குகின்றன.


11. ஈரி ஏரிலிருந்து வரும் மிதக்கும் பனி மலைகளை
தடுப்பதற்க்காக நயகரா ஆற்றில் ஐஸ் பூம்
எனப்படும் இரும்பு வலை தடுப்பு இரண்டு மைல்
துரத்திற்கு ஆற்றில் நிறுவபட்டுள்ளது.


12. மார்ச் 29,1848ல்,ஆற்றில் மிதக்கும்
பனிபாரைகளால் ஏற்பட்ட ice jamஆல்,அருவியின்
தண்ணீர் வரத்து மொத்தமாக நிறுத்தபட்டது
.

0 பின்னூட்டங்கள்:

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home